Items

View as:
Item
Inscription
South Indian Inscriptions II (I), No. 9
மூன்று சந்தியும் அமுது செய்விக்க ஒரு சந்திக்கு கற்பூரமஞ்சாடியாக ஒருநாளைக்கு கற்பூரமூன்று மஞ்சாடியாக ஒராட்டைக்கு கற்பூரம் 54 கழஞ்சும் திரு உத்சவதிருநாள் ஒன்பதிநுக்குபடி மெல் எற்றம் நிசதம் கற்பூரம் காலாக கற்பூரம் இருகழஞ்செய் காலும் ஆக கற்பூரம் 56 கழஞ்செ காலுக்கு காசு 1க்கு கற்பூரம் இருகழஞ்சரையாக காசு இருபத்திரண்டரைக்கு காசு ஒன்றுக்கு கற்பூரம் இருகழஞ்சரையாக காசு இருபத்திரண்டரைக்கு காசு 1 க்கு ஆட்டை வட்டன் அரைக்காற்காசு பொலிசையாக் வைத்த காசு 180. காசு 1070னால் காசு 1க்கு ஆட்டைவட்டன் முக்குறுணி நெற்பொலிசையாக.
Item
Inscription
South Indian Inscriptions II (II), No. 24
எலவரிசி ஆழாகாக ஒராட்டைக்கு ஐங்குறுணி ஐஞ்ஞாழியும். ஒராட்டைக்கு இலாமச்சம் 2268 பலத்துக்கு காசு 1க்கு அறுநூற்று ஐம்பலமாகக் காசு மூன்றே முக்காலுக்கு வந்த இலாமச்சம் 2268 முக்கைசுக்கு ஆட்டை வட்டங்காசு ஒன்றுக்கு திங்கள் அரைக்காலக்கப் பலிசையாகக் காசு 30க்கு வந்த அக்கம் 45 இவை காசு 1க்கு அக்கம் 12 ஆக்கிவந்த பொலிசைக்காசு மூன்றே முக்காலுக்கு வைத்த காசு 30.
Item
Inscription
South Indian Inscriptions II (II), No. 25
காசு 40னால் காசு 1க்கு ஆட்டை வட்டம் அரைக்காற்காசு பொலிசையூட்டாக.
Item
Inscription
South Indian Inscriptions II (II), No. 26
திருஅமுது செய்ய ஆடவலானால் பொனகப்பழவரிசி பதக்குந் திருவிழா எழுந்தருளு நம்பிராட்டியார்க்கு பொனகப்பழவரிசி குறுணியும் அப்பக்காய்கறியமிதுக்கு பழவரிசி உழக்கு ஆழாக்கும் ஆகப்பொனகப்பழவரிசி முக்குறுணி உழக்கு ஆழாக்குக்கு ஐஞ்சிரண்டாக்கி வந்த பொனகப்பழநெல்லு எழுகுறுணி நானாழி முழக்கே ஆழக்கேயிருசெவிடரையும் இவை பூரி ஆக வாசி எற்றிப்பூரிநெல்லு இருதூணி நானாழி உரியாழாக்கும். காசு78னால் காசு 1க்கு ஆட்டைவட்டம் முக்குறுணி நெல்லு பொலிசையூட்டாக.
Item
Inscription
South Indian Inscriptions II (II), No. 27
நிசதம் மஞ்சாடி கற்பூரமாக ஆட்டைவட்டம் கற்பூரம் பதினென் கழஞ்சுக்கு காசு 1க்கு கற்பூரம் முக்கழஞ்சாகக் காசு ஆறினுக்கு கற்பூரம் பதினென் கழஞ்சு பொலிசையாக கொண்டு வைத்த காசு 50 க்கு ஆட்டைவட்டம் காசு 1க்கு அரைக்கால் காசு பொலிசையாக.
Item
Inscription
South Indian Inscriptions II (II), No. 28
ராஜகேசரியொடொக்கும் ஆடவல்லானெனுமரக்காலால் அளக்கக்கடவ நெல்லு இருபத்தைங்கலம்.
Item
Inscription
South Indian Inscriptions II (II), No. 29
உடையார் கோயிலில் முழத்தால் அளந்து.இருதிற்று விரலே நாலு தொரை உசரத்து நாலு ஸ்ரீஹஸ்தம் உடையராகக் கனமாக எழுதருளுவித்த சண்டெஸ்வர தேவர் திருமேனி ஒருவர்.
Item
Inscription
Item
Inscription
Item
Inscription
Item
Inscription
South Indian Inscriptions II (II), No. 35
…..ஒரு நாளைக்கு ஆடவல்லானெனும் மரக்காலால் நிசதம் நெல்லு தூனிப்பதக்கு ஒருநாழியுரியாக ஒராட்டைக்கு நெல்லு 185 கலனெ 7 குறுணி நானாழிக்குத் தஞ்சாவூர் உடையார் பெரும் பண்டாரத்தெ ஆட்டை வட்டம் காசு ஒன்றுக்கு முக்குறுணி நெல்லுப் பொலிசையூட்டாக அட்ட வைத்த காசு 743.
Item
Inscription
South Indian Inscriptions II (II), No. 36
எண்சதுரமாகச்ச்செய்வித்துக்குடுத்த படிக்கம் ஒன்று நிறை 69ன் பலம் இதுக்கு விலை காசு மூன்று
Item
Inscription
South Indian Inscriptions II (II), No. 37
ஆலையத்துப்பிள்ளையார் கணபதியார்க்கு அமுது செய்தருள நிசதம் வாழைப்பழம் 150 ஆக ஒராட்டைக்கு வந்த வாழைப்பழம் ஐம்பத்து நாலாயிரத்துக்கு காசு ஒன்றுக்கு வாழைப்பழம் 1200 ஆக வந்த காசு 45 க்கு காசு ஒன்றுக்கு ஆட்டை வட்டம் அரைக்காற்காசு பொலிசையூட்டாக சந்திராதித்யவத் செல்ல வைத்த காசு 360.
Item
Inscription
South Indian Inscriptions II (II), No. 38
பாதாதிகேஸாந்தம் 1 முழமே 4 விரலரை உசரத்து 2 திருக்கையுடையராகக்கனமாக பெருமாள் ப்ரதிமம். உருத்ராக்ஷத்தாழ்வடம் ஒன்றிற்பொன்னின் சுரி 56ம் உருத்ராக்ஷம் 56ம் உட்பட நிறை எண்கழஞ்செய் ஒன்பது மஞ்சாடிக்கு விலை காசு 25.
Item
Inscription
South Indian Inscriptions II (II), No. 39
செப்புத்திருமேனி கோயிலில் முழத்தால் அளந்தும் ரத்னங்கள் சரடுசட்டமும் நீக்கி தக்ஷிணமேருவிடங்கன் என்னுங்கல்லால் நிறை எடுத்தும் பொன் ஆடவல்லான் என்னுங்கல்லால் நிறை எடுத்தும்.
Item
Inscription
South Indian Inscriptions II (II), No. 40
பொன் எழுமஞ்சாடி உட்பட ருத்ராக்ஷம் ஒன்று நிறை அரைக்கழஞ்செ நாலு மஞ்சாடியுங் குன்றிக்கு விலை காசு ஒன்று.
Item
Inscription
South Indian Inscriptions II (II), No. 41
தரா நிலைவிளக்கு 1 இருப்பு நாராசம் உட்பட நிறை 41பலவரை, 120 பலம், வெண்கலமடல் ஒன்று நிறை நாற்பலம்.
Item
Inscription
South Indian Inscriptions II (II), No. 42
முக்காலெ அரைக்கால் முழ உசரமும்
Item
Inscription
South Indian Inscriptions II (II), No. 43
முத்து 37னால் நிறை 8 மஞ்சாடிக்கு காசு கால். பிரதிமங்கள் மூவரும் நின்ற இருபத்து மூவிரல் நீளத்து ஏழுவிரல் அகலத்து எண்விரல் உசரத்து பீடம் 1.
Item
Inscription
South Indian Inscriptions II (II), No. 44
இருபத்தொரு விரலெய் ஆறு தோரை உசரத்து ஒரு முழமேய் பதினொரு விரலே இரண்டு தோரைச்சுற்றில் எழுந்தருளுவித்த கபுணதேவர். புஞ்சைமுத்து 436னால் நிறை கழஞ்சரையெ 2 மஞ்சாடியுங்குன்றிக்கு விலை காசு கால், 817னால் நிறை முக்கழஞ்சரைக்கு விலை காசு அரை.
Item
Inscription
South Indian Inscriptions II (II), No. 46
முத்து 378 நிறை 11கழஞ்செய் முக்காலெ மஞ்சாடியுங்குன்றிக்கு விலை காசு பதின்மூன்றே காலெ அரைக்கால்.
Item
Inscription
Item
Inscription
South Indian Inscriptions II (II), No. 48
4 விரலே 2 தொரை உசரம் உடைய பத்மம் ஒன்று. பொன் இருபதின் கழஞ்செய் ஆறு மஞ்சாடி. பொன் 11 கழஞ்செய் முக்காலெ இரண்டு மஞ்சாடியுங் குன்றி.
Item
Inscription
Item
Inscription
Item
Inscription
South Indian Inscriptions II (II), No. 51
முத்து 2524 நிறை நூற்று அறுகழஞ்செய் மஞ்சாடியும் இரண்டு மாவுக்கு விலை காசு 141.
Item
Inscription
South Indian Inscriptions II (II), No. 54
காசு 120னால் காசு 1க்கு ஆட்டை வட்டன் அரைக்கால்க்காசு பொலிசையாக சந்திராதியவல் ஆட்டாண்டு தோறும் உடையார் பண்டாரத்தேய் வைக்க கடவ காசு 15.
Item
Inscription
South Indian Inscriptions II (II), No. 59
வயிரம் 10னால் நிறை மஞ்சாடியுங் குன்றியும் உள்ளரக்கும் பந்தமும் ஆக நிறை 176 கழஞ்சரையே 3 மஞ்சாடியும். நிறை 1051 கழஞ்செ ஒன்பது மஞ்சாடியுங் குன்றிக்கு விலை காசு 2000. பவழம் 24னால் நிறை கழஞ்சு ஆக நிறை அறுபத்தைங்கழஞ்சரையெ மூன்று மஞ்சாடிக்கு விலை காசு 90.
Item
Inscription
South Indian Inscriptions II (II), No. 61
பதின் ஒரு வேலி நிலம் இறையிலியாக இரண்டாவது வைகாசி மாதம் முதல் குடுத்தோம்
Item
Inscription
South Indian Inscriptions II (III), No. 65
ராஜராஜ தேவர் குடுத்த பிடாரர்கல் 48மரும் இவர்களில் நிலையாய் உடுக்கை வாசிப்பான் ஒருவனும் நிலையாய்க்கொட்டிமத்தளம் வாசிப்பான் ஒருவனும் ஆக 50 பேர்க்கு நிசதம் நெல்லு முக்குறுணி நிவந்தமாய் ராஜகேசரியொடொக்கும் ஆடவல்லானென்னும் மரக்காலால் உடையார் உள்ளூர்ப்பண்டாரத்தேய் பெறவும்
Item
Inscription
South Indian Inscriptions II (III), No. 66
தளிச்சேரிப்பெண்டுகளுக்கும் நிவந்தமாகப் பங்கு செய்தபடி பங்கு வழி பங்கு ஒன்றினால் நிலன் வேலியினால் ராஜகேஸரியொடொக்கும் ஆடவல்லானென்னும் மரக்காலால் நெல்லு நூற்றுக்கலமாகவும்
Item
Inscription
South Indian Inscriptions II (III), No. 67
திருவிலாவில் ராஜரானெஸ்வர நாடகமாட இவனுக்கு இவன் வர்க்கத்தார்க்கும் காணியாகப் பங்கு ஒன்றுக்கு ஆடவல்லானென்னும் மரக்காலால் நித்த நெல்லுத்தூணியாக நூற்றிருபதின் கலநெல்லும் ஆட்டாண்டு தோறும் தேவர் பண்டாரத்தேய் பெறச்சந்திராதிதவற் வெட்டியது.
Item
Inscription
South Indian Inscriptions II (III), No. 69
திருப்பரிசாரகஞ்செய்யும் மாணி ஒருவனுக்கு நிசதம் நெல்லுப் பதக்கும் ஆட்டை வட்டன் காசு நாலும் …. இருபதின்மார்க்குப் பேரால் நிசதம் நெல்லுப்பதக்கும் ஆட்டை வட்டன் காசு ஐஞ்சும் கணக்கெழுதுவான் ஒருவனுக்கு ஒராட்டைக்கு நெல்லு இருநூற்றுக்கலமும் இவனிடக்கடவ கீழ்க்கணக்கு ஒருவனுக்கு ஒராட்டைக்கு நெல்லு எழுபத்தைங்கலமாக இருவர்க்கு நெல்லு நூற்றைபதின் கலமும்...
Item
Inscription
South Indian Inscriptions II (III), No. 70
திருமெய்காப்பார்களுக்குப் பேரால் ஆட்டைவட்டன் நூற்றுக்கலநெல்லுத்திருமெய் காப்பார்களை இட்ட ஊர்களைலார்க்கு சந்திராதித்யவல் ஆட்டாண்டு தோறும்
Item
Inscription
South Indian Inscriptions II (III), No. 71
திக்விஜயமாக வேணும் என்று கொடுத்த பெரிய பட்டம் ஒன்று எட்டரை மாறி பொன் தூக்கம் ஒன்றுக்கு பண இடை பத்தாக தூக்கம் இருபது, பட்டம் ஒன்று எட்டு மாறி தூக்கம் 17 பண இடை 8, பட்டம் ஒன்று 8 மாறி தூக்கம் 6 பண இடை இரண்டு, மூக்குத்தி நிறை பண இடை 2 etc.
Item
Inscription
South Indian Inscriptions II (III), No. 75
பிராந்தகன் மாதேவடிகளார் ஒரு திருநொந்தாவிளக்கு இரவும் பகலும் எரிவதாக நிசதம் சூல உழக்கால் உழக்கு நெயட்டி சந்திராதித்தவல் எரிப்பதாக வைத்த சாவா மூவாப்பேராடு 90
Item
Inscription
South Indian Inscriptions II (III), No. 78
தெற்கடைய இட்ட நிலம் இருவேலியும் கல்லு வெட்டிக்கொள்கவென்று
Item
Inscription
South Indian Inscriptions II (III), No. 85
யாண்டு மூன்றாவது வரைகுடுத்த செம்புந்தராவும் வெண்கலமும் ஆடவல்லான் என்னுந் திலாக்கோலால் நிறையெடுத்துக்கல்லில் வெட்டின………வெண்கலத்தளிகை ஒன்று நிறை 75 பலம், வெண்கலக்கைச்சொலம் ஒன்று நிறை நாற்பலனெகைசு, வெண்கலத்தட்டம் ஒன்று நிறை ஒருபலனெ கைசு.
Item
Inscription
South Indian Inscriptions II (IV), No. 82
ஸ்ரீராஜெந்திரசோழதேவர்க்கு யாண்டு ஏழாவது முதல் கொண்ட காசு 150னால் காசு ஒன்றுக்கு ஆட்டைவட்டன் முக்குறுணி நெல்லு பொலிசையாக சந்திராத்தவல் ஆட்டாண்டுதோறுந்தஞ்சாவூர் உடையார் பெரும்பண்டாரதே ஆடவல்லானென்னும் மரக்காலால் அளக்கக்கடவ நெல்லு முப்பத்தெழுகலநெய் தூணிப்பதக்கு
Item
Inscription
South Indian Inscriptions II (IV), No. 83
யாண்டு பத்தாவது பசானமுதல் கொண்ட காசு இருநூறினால் காசு ஒன்றுக்கு ஆட்டைவட்டன் ஆடவல்லானென்னும் மரக்காலால் முக்குறுணி நெல்லுப்பொலிசையாக ஆட்டாண்டு தோறும் தஞ்சாவூர் உடையார் பெரும்பண்டாரந் தஞ்சைவிடங்கனிலேய் மரக்காலால் அளக்கக்கடவ நெல்லு 50ன் கலம்.
Item
Inscription
South Indian Inscriptions II (IV), No. 86
பொன் 25 கழஞ்செ கால், ரத்னங்கள் சரடு நீக்கி தக்ஷிணமேருவிடங்கன் என்னுங்கல்லால் நிறை எடுத்தும் பொன் ஆட்டவலான் என்னுங்கல்லால் நிறை எடுத்துங்கல்லில் வெட்டினபடி கொம்பிற்கொள்கை ஒன்றில்த் தடவிக்கட்டின மாணிக்கம் எட்டுந்தடவிக்கட்டின பளிங்கு இரண்டும் பளிக்குவயிரம் பதிநாலும் முத்து வட்டமும் அனுவட்டமும் ஒப்புமுத்துங் குறுமுத்துஞ்சப்பத்தியும் ஆக முத்து நூற்றொருபத்தொன்பதும் பொன்னும் அரக்கும் உட்பட நிறை பதினாற்கழஞ்செ முக்காலெ மஞ்சாடிக்கு விலை காசு இருபத்து மூன்று.பொன் எண்கழஞ்சரையே மஞ்சாடியுங்குன்றிக்கு விலை காசு 18. etc.
Item
Inscription
Item
Inscription
South Indian Inscriptions II (IV), No. 88
யாண்டு 29வது வரைகுடுத்த வெண்கலத்தளிகை ஒன்று நிறை 29ன் பலம்
Item
Inscription
South Indian Inscriptions II (IV), No. 89
சங்கிட்டு அடைத்த கற்கண்டு ஒன்றில் தடவிக்கட்டின பளிங்கு இரண்டும் பொன்னின் காம்பும் உட்பட நிறை நாற்கழஞ்சுக்கு விலை காசு ஒன்றேய் கால், திரள்மணிவட்டம் ஒன்று பொன் ஒன்பதின் கழஞ்செய் மூன்று மஞ்சாடி.