பதிநறுசாண் கோலால் குழியிரண்டாயரமும் விற்று இந்னிலத்துக்கு விலைப்பொருளிவன் பக்கல் கொண்ட பொன் மதுராந்தகன் மாடையொடொக்க குடி நற்கல்லால் நிறை பதிநொரு கழஞ்சும் அறக்கொண்டு இறையிலிதேவதாநமாக்கி இந்நிலத்துக்கு வெலிக்காசும்
பெருநாந்கெல்லியுள்பட்ட நிலம் ௪ ന്ത நாலே முக்காலும் …..விலைபொருள் அன்றாடு நற்காசு ௪ பമ இக்காசு நாலே மாகாணியுங் கைக்கொண்டு வேண்டும் நிமந்தங்களுக்கு இந்நில ௪ ന്ത கல்லித்திருத்தி ஸ்ரீ பண்டாரத்து புந்செய் வரிசையால் வேலி ஒன்றுக்கு நெல் ஐங்கலமாக ராஜகேஸரி மரக்காலால் இந்நிலம் ௪ ന്ത அளப்பதாந ஜ ௨௰௩ இந் நெல் இருபத்துமுக்கலநெ இருதூணிக்குறுணியும் அளக்குமடத்தில் கார் பாதி பசாநம் பாதி அளப்பதாகவும்
ஆகப்பாடகம் முப்பத்திரண்டெ காலிநாற்பொன் பதிநொருகழஞ்செ முக்காலெ மஞ்சாடியுமிரண்டு மாவும் கோயிலில் தெற்கு எழுமாவரை ஏற்றி பொன் பன்னிருகழஞ்சும் இத்தேவர்க்கு இறையிலியாக
திருந்தவனக்குடிகள் பேர் இருவர்க்கு இறையிலியாக விலைகொண்ட நிலம் …இரண்டாஞ்சதிரதுக் கொல்லை நிலம் ஒருமாவும், பிடாகை…முதற்சதிரத்து மிகுதிக்குறைவு உள்ளடங்கத்தரம் பெற்ற நிலம் அரையெ மூன்று மா முக்காணி அரைக்காணி முந்திரிகைகீழ் முக்காலெ நாலு மா அரைக்காணி முந்திரிகையும் ஆகக்கொல்லை உட்பட ஊர்படி நிலம் அரையெ நாலுமா முக்காணி அரைக்காணி முந்திரிகைக்கீழ் முக்காலெ நாலு மா அரைக்காணி முந்திரிகையினால் மடக்கு நிலம் அரைக்காணி முந்திரிகைக்கீழ் ஒன்பது மா முக்காணிக்கீழ் முக்காலெ முக்காணியும் திருநந்தவனமும் திருநந்தவனப்புற இறையிலியுமாக. இந்நிலத்துக்கு தண்ட நிச்சயித்த காசில் மடக்கொபாதியால் வந்த காசு ஊரில் கழிக்கவும்....திருநந்தவனக்குடிகள் அளக்கக்கடவ திருப்பள்ளித்தாமம் பேர் ஒன்றுக்கு நாளொன்றுக்குக் குறுணி நானாழியாக வந்த திருப்பள்ளித்தாமம் திருப்பூமண்டபத்துக்கு முதலாக அளக்கவும்
நந்தாவிளக்குக்கு விளக்கு எரிப்பதற்கு வைத்த பொன் நூற்கற்செம்மை முப்பதின் கழஞ்சு இப்பொன்னுக்கு கழஞ்சின்வாய் மூன்று மஞ்சாடிப் பொன் பலிசைய்யாக ஆண்டுவரை நாற்கழஞ்சரை பொன்னுக்குத் …..நிலவிறை பொக்கி சாமிபோகத்தால் வந்தது.
விலைகொண்டு உடைய நிலம் மண்ணிலை நீக்கி இரண்டு மாவும் மண்ணிலை அரைமாவும், …திருவமிதுக்கும் அர்ச்சநாபொகமுமாக இதினொடு மடைய ஒருமாவும் …..ப்ராமணி பக்கல் விலைகொண்டுடையெனாய் குடுத்த நிலம் அரைமாவுமாக செ திருப்பணம்பூதூர் பரமெஸ்வரர்க்கு இந் நான்மாச்செய்யும்
இறையிலியாக குடுத்த நிலமாவது ……வடகண்டத்து எங்கள் இரண்டு மாவும் தென்கண்டத்து மேற்க்கடைய ஒரு மாவும் ஆகத் தடி இரண்டால் நிலன் மூன்றுமாவும் ….கல்லிவிளைகின்ற சுண்டைகுழி காணியும் ஆக நிலம் மூன்றுமாக்காணியும் மிகிதிக்குறைவு உள்ளடங்க விற்றுக்குடுத்துக் கொண்ட …காசு பழவாவு 31ம் கொண்டு இன்னிலம்
தேவர்க்கு பொலியூட்டினால் வைத்த விளக்கு அராய்ந்த இடத்து இந்த ஸ்ரீகோயில் கற்றளி எடுப்பதற்கு முன் பொலியூட்டுக்குப் பிரமாணமாய் உள்ள கற்கள் எல்லாம் அடிமனைகீழெ இட்டி கல்லின் படி எடுத்துக்கொண்டு இட்டமையில் முன்படி எடுத்தபடி …விளக்கினுக்கு வைச்ச பொன் 60 கழஞ்சும் கொண்ட திரைமுர் சவையார் அட்டகடவதான நெய் உரினால் விளக்கு 1
ஸ்ரீக்ருஷ்ணர்க்கு இரண்டு வாவும் அஷ்டமியிம் சங்ராந்தியும் இந்நாள்ளொன்றைக்கு நானாழி நானாழி அரிசி யால் அமுதுபடிம்முது செய்விக்க வைத்த பொன் திருவெள்ளறைகல்லால் (இ)ருபதின் கழஞ்சும் விளக்கொன்றுக்கு வைத்த
இரண்டு நொந்தா விளக்குக்கு வைச்ச நிலம் ஒருமாவும், திருஅமுதுக்கு குடுத்த நிலம் ஒரு மாவும் ஆக இரண்டு மா …..நீக்கி விற்று இறையிழிச்சித்திருவிழாப்புரமாகக் குடுத்த நிலம் ஒருமாவரைச்சிந்ந நிலமு மாதிருவதிக்கு கிழக்கு
அமுது செய்ய இட்ட பொன்னின் குழித்தட்டு ஒன்றினால் நிறை பண்டாரக்கல்லால் துளைநிறை எண்ணூற்றெண்பத்தெண் கழஞ்சு ….இரண்டு கலத்தினுக்கு …வைத்த பொன் துளை நிறை நாற்பதின் கழஞ்சு
வைத்த பூமி சூப்ரஹ்மணய நாராசத்தின் வடக்கு 23 கண்ணாற்று ….வதிக்கு கிழக்கு 3ம் சதுரத்தின் நாலந்தரம் குழி 201ம் …..குழி 480ம் …குழி 240ம் ….குழி . 540ம் ஆக 4080 செய் நிலம் மூன்றுமாகாணி அரைகாணிக்கும் எபேர்பட்ட
பெருமான் அடிகள் அச்சிநாபோகம்மான பூமி மணல் இட்டு கெட்டு கிடந்த பூமியோடு இந்நிலம் கழநி கோலால் ஆயிரத்து நாநூறு குழி ஊர் மஞ்சிக்கமாந பூமி (குழி 400+400+600)
குழி 202, குழி 680, குழி 820ம் ஆக ஆயிரத்தஞ்ஞூற்றிரண்டினால் நிலம் ?????? குழி நாநூறேண்பதினால் நிலம் ?? யும் ஆக நிலம் ??????? ….யிருபத்தைங்கழஞ்சு பொன் தேவரடியாரே மன்றபெறுவதாகவும்