திருவிழாவினுக்கு மாசிமகத்துமாக ஆண்டு வரை கழஞ்சின்வாய் இருபத்தைஞ்சி பிராமணரை மூன்று கறியுமரை பிடி நெய்யுன் தயிரு மொருகாயுமிலையுங் குறையாமல் ஊட்டுவதாக வச்ச பொன் நால்ப்பதுங் கொண்டு
நிலவிலைப்ரமாணம் பண்ணிக்குடுத்த பரிசாவது …. ஆணிப்பொன்னுக்கு அரைமாவரை……..இவ்வூற் பஞ்சந்தாங்கி ஏரியில் மழவறைவை…. சாத்தன் குண்டு தடி இரண்டு குழி 85ம் …பக்கல் சாறோடியில் தடி ஒன்று ….. குழி 27ம் ஆக தடி 4 குழி 122க்கு ….பழவாறையில் தடி ஒன்று குழி 22க்கு… பணம் 12ம்....புட்டகன் தடி 2 குழி 50க்கு ஆக தடி 10 தனால் குழி 345க்கு...னூற்று நாற்பத்தைஞ் (கலம்)....தெண்ணாயக்கர் திருவக்களில் செட்டியப்பன் வசம் செலவறுத்த பணம் 150ம் மேற்ப...சுரத்துக்கு கழித்தபடி யிச் செலவறுத்த பணம் 120ம் ஆக பணம் 270 க்கும் இந்நிலம் விற்று பொருளுரக்கொள்கையில்
விலைகொண்ட நிலம் ….இரண்டாங்கண்ணாற்று முதற்சதிரத்து நிலந் மூன்றே இரண்டுமாவின் கீழ் ஏழுமா முந்திரிகைக் கீழ் முக்காலும் இங்கெ இரண்டாஞ்சதிரத்து நிலம் (குறியீடு), ஓடை நிலம் (குறியீடு), முதற்சதிரம் (குறியீடு), இங்கே 3 கண்ணாற்று 2 சதிரத்து (குறியீடு), 4ம்கண்ணாற்று 2ம்சதிரத்து (குறியீடு), இங்கே (குறியீடு), ஆக நிலம் (குறியீடு), இதில் தரமிலி (குறியீடு) நீக்கி தரம் பெற்ற (குறியீடு) னால் பலதரமடக்கு (குறியீடு) எட்டாந்தரமாக்கிக்கொள்கவென்று பிரஸாதஞ்செய்தருளிவந்த திருமுகப்படியும் முலபருஷையர் சபாநியோகப்படியும் எட்டாந்தரமாக்கி குறைந்த மடக்கு (குறியீடு), நீக்கி இறுக்க நிலைநின்ற மடக்கு (குறியீடு) யாண்டு 46 நாள் 46 கல்வெட்டிகொள்கவென்று
பிராமணப்படி கொண்ட நிலன் நாற்பத்தேழரையும், ஆறரையும், ஒன்றேமுக்காலே மூன்றுமா முக்காணியும், ஒன்பதே மாகாணியும், ஒன்பதரையெ மூன்றுமாவும், ஏழே இரண்டுமா அரைக்காணி இதில் நிலன் மூன்றரை நீக்கி நிலனும் ஆகக் குணமெநகைபுரத்தொடும் ஏறின விரிவு நிலன் எழுவத்தெட்டெகாலே அரைக்காணி இதில் நீங்கு நிலன் முப்பத்துநாலேகாலெ அரைக்காணி நீக்கி நிலன் நாற்பத்துநால் வேலி, இது பல கிடப்பினாலும் ராஜெந்திரசிங்கன் மரக்காலுக்குக் கலத்துவாய்த் தூணி இளைமரக்காலால் வரிசை இட்டபடி நெல்லு 4500க்கலம் இதில் மேல்வாரத்தாலுடைய நெல்லு 2250கலம் இவை காசு ஒன்றுக்கு நெல்லு எண்கலநெ தூணிப்பதக்காக வந்த காசு 264லே முக்காலும், அங்காடிப்பாட்டத்துக்கு வைக்கக்கடவ காசு 40ம் ஆகக் காசு 304லே முக்காலும் இவையிற்றுக்குச் செலவாக மார்கழித்திருவாதிரை திருநாளைக்கு வேண்டும் வழக்கத்துக்கு பரிசட்டம் உள்ளிட்ட அழிவுகளுக்கு வேண்டும் காசு நூற்றிருபதும் அமுதுபடிக்கும் திருவிளக்கு எண்ணை 400 நாழி உள்ளிட்ட அழிவுக்கு காசு நூற்றெண்பதும் திருமாசித்திருநாளில் விண்ணப்பச்செய்வாற்க்கு காசு ஐஞ்சும் ஆக முந்நூற்றஞ்சும் கொண்டு நிமந்தம்........ பிராமாணப்படி விலைகொண்டுடைய நிலம் பதினைஞ்சரை இதில் பயிர் செய்ய ஒண்ணாது நீங்கு நிலம் ஐஞ்சரை நீக்கி பதிற்றுவேலி இது மரக்கால் மேற்படி காலால் நெல்லுப் 12 கலனெ முக்குறுணியாக வரிசை இட்ட நெல்லு 2450 கலம் இதில் மேல்வாரத்தால் நெல்லு 1150கலம் இவையிற்றுக்குச் செலவாக........ நாள் ஒன்றுக்கு நெல்லு முக்கலநெ முக்குறுணியாக ஒராட்டக்கு நெல்லு ஆயிரத்திருநூற்றிருபத்தைங்கலநெ எழுகுறுணி நாணாழி.
ஆறு சந்தி நடக்கும் படிக்கு பொலியூட்டாக தாம் இற்றைநாள் ஸ்ரீ பண்டாரத்துக்கு செலுத்திந " எ௲௮௱ ம் திருவிடைஆட்டத்தில் எரிகால்வாயிலெ இட்டுத்…… அமுதுசெய்தருளும் ….திருப்பொநகம் ஆறுக்கு மலைகுநியநின்றான் காலால் அமுதுபடி முவுழக்காலும் நெய்யமுது முவுழக்கும்…….
பொன் கைக்கொண்டு கற்பூரவிளக்கு ஒன்று உட்பட கட்டக்கடவ திருநுந்தாவிளக்கு 21 இவர்கள் எரித்துவரும் திருவிளக்கு 2 நீக்கி …..அகப்பட்ட முதலுக்கு வுடைய பொன் 20, பண்டாரத்தில் உடைய ப்ன் 3 ம ஆகப்பொன் 23 ம்
பெருமாள் இராசாக்கள்நாயனார் காங்கெயர் சாத்தின பட்டம் ஒன்றினால் பொன் எடை இருகழஞ்சு நாராசத்துக்கு வடக்கு மனைக்கு குடுத்த பணம் இருபது திருப்பாட்டுப்பணியும் இம்மனையும் இவற்கு காணிஆகவும் இம்மனை நார்கொலும் திருக்கைகொட்டிபணியும் காணியாகவும் பணி ஒன்றுக்கு தூணி நெல்லும் 24 பணமும் இடுவதாக
திரு நொந்தாவிளக்கு ஒன்றுக்கு விட்ட பால்பசுப் 10ம் சினைப்பசு 10ம் பொலிமுறைநாகு 12ம் ரிஷபம் 1ம் ஆக உரு 33 ம் கைகொண்டு நாள் ஒன்றுக்கு திருவெகம்பநாழியாலளக்கும் நெய் உழக்கும் தயிரமுது நாழியும்
ஏகாம்பரநாதநல்லூர் ஒன்றுக்கு மாடை 133ம் காரைஊர் ஒன்றுக்கு மாடை 140ம் திருவாய்ப்பாடி ஊர் ஒன்றுக்கு மாடை 10ம் ஆக மாடை 283க்கும் திருவேகம்பம் உடைய நாயனார் கோயிலுக்கு இராமதேவி அவ்வையார் பேரால் பண்ணின காக்குநாயக விளாகமான சிங்காரத்தோப்பு 1க்கு பொன் 10ம் பணம் 2ம் ஆக ஊர் 3க்கும் தானமான்யம்
விளக்கு ஒன்றுக்கு விட்ட பால்பசுப் 10ம் சினைப்பசு 10ம் பொலிமுறைநாகு 12ம் ரிஷபம் 1ம் ஆக உரு 33 ம் கைகொண்டு திருநந்தா விளக்கு ஒன்றுக்கு அரியென்னவல்லாநாழியாலெ நெய் உழக்கும்
ப்ராமணர்காணியான ஒன்று பாதி நீக்கி திருநாமத்துக்காணியான பாதியும் காராண்மை காணியாக அனுவிப்பதாக கற்பூரவிலை நிச்சயித்த புதுக்குளிகை பணம் 220 எப்பேற்பட்ட இறைகளுக்கும் கடமை இறுக்கும்படியாவது காடுவெட்டின ஆண்டுக்கு இவ்வூர் பதினெட்டடிகோலால் மாத்தால் நெல்லு 4 கலமும் இதனெதிராமாண்டு மாத்தால் நெல்லு 6 கலமும், எதிராமாண்டு 8 கலமும், எதிராமாண்டு 10 கலமும், எதிராமாண்டு 12 கலமும் இதன் எதிராமாண்டு முதல் நிலைவரிசை மாத்தால் நெல்லு 15 கலமுமாக ஆண்டு தோறும் பயிர்பார்த்து பயிர் நின்ற .......
மலைக்குடிக் கோலால் பெரும்பூவும் குறுவையும் விளையும் நிலத்திலெ நிலம் ஆறுமாவும் ஒருபூவிளையும் நிலத்து நிலம் ஆறுமாவும் ஆக நிலம் அரையே இரண்டுமாவும் காராண்மை மீயாட்சியும் அந்தராயமும்….
தடி நாலும் ஸ்ரீபலிபட்டியாகவும் நீக்கி நின்ற நீர் நிலத்து…. திருவமுது அரிசி நாநாழியாக சந்தி இரண்டுக்கு அரிசி குறுணிக்கு ஐஞ்சிரண்டாக நெல்லு……. நெய்யமுது செவிடரையும்,
கொடுவர தானத்தார் குடுத்த பணம் 100ம் இந்நாயனார் பண்டாரத்தில் குடுத்த புதுக்காசால் பணம் 80ம் ஆக 180ம் இவர் பக்கலே கைக்கொண்டு …….அச்சு பத்தும் கைக்கொண்டு இவ்வமுதுபடி அரிசி இருநாழியும் இக்கோயிலில் குடங்கொண்டு ……..
…….வகைசெய்கிற சுழல்லூர் உடையாரும் திருக்கோயிலுடையார்களை சூற்றியக்கிராணத்தின் நாளன்று நம் நம்பிராட்டி வாராவிட்ட குற்றத்தால் தண்டங் கொண்ட பொன் காசுகல்லால் 3 கழஞ்சால் பட்டம் 1
வரைந்த கணக்குப்படி ஊர்விழுக்காட்டொபாதி கார்மறுநிலம் ஆறேகாலெ முக்காணி அரைக்காணியும் ஒரு பூ நிலம் ஐஞ்செகாலே காணி அரைக்காணி முந்திரிகையும் இறைத்தல் ஒரு பூ நிலம் மூன்றரையே ஒருமாவும் ஆக நிலம் பதினஞ்செ இரண்டுமா முக்காணி முந்திரிகையும் புன்செய்நிலம் ஒன்றேகாலே அரைமாவும் நத்தம் நிலம் காலு ஆக நிலம் பதினாறரையே இரண்டுமா முக்காணிமுந்திரிகையும் முன்பு நாலாவதுமுதல் காணியும் இறையிலியுமாக ராஜஸம் எழுதிக்குடுத்து அனுபவித்துவருகிற கார்மறு நிலம் பதிற்றுவேலியும் புன்செய் நிலம் காலும் நத்தம் நிலம் காலும் ஆக நிலம் பத்தரையும் உட்பட இந்நிலம் பதினாறரையே இரண்டுமா முக்காணிமுந்திரிகைக்கும் இருபத்து மூன்றாவது வரைய்க் கணக்குப்படி விழுக்காட்டொபாதி காசு 13133ம் நெல்லு 1712கலனே ஐங்குறுணி முன்னாழியும் அனைத்துவினியோகங்களும் உட்பட இறையிலியாகக் காணியாக குடுத்தோம்