நொந்தாவிளக்கினுக்கு நிசதம் எண்ணை (குறியீடு) வைத்த காசு 10,அடைக்கய அமிது நிசதம் 6னுக்கு வைத்த காசு 3ம் …….. தேன் (குறியீடு), நெய் (குறியீடு), தயிர் (குறியீடு), எள்ளு (குறியீடு) நெல் (குறியீடு) etc.
மூன்றாங் கண்ணாற்று நாலாஞ் சதிரத்து திருப்புத்தூரானென்று பேர்கூவப்பட ௺ (குறியீடு) ல் தெற்கடைய கொண்டு விட்ட நிலம் காணிஅரைக்காணி …. இதில் நிலம் காணி நீக்கி இறை மிகுதிக்கு உடலான நிலமாய் திருமஞ்சனம் எடுக்கும்..
ஒரு திருநொந்தாவிளக்குக்கு வைய்த்த காசு 100 ம் மேற்படியாரெய் வைய்த்த தரா நிலைவிளக்கு ஒன்று உள்கரு வுட்பட நிறை 224 பலம், வைத்த காசு 100 கொண்டு ஆடு 90 கொண்டு எரிய நாங்களும் …………ஆடு இருபத்திரண்டரையினால் அட்டக்கடவ நெய் 22 நாழி உரியும் etc.
இத்தேவர்க்குத் திருவமுதுக்கு …… ஆக நெல் ஐங்குறுணி அறுநாழி முழாக்கு இதில் அரிசி பதக்குக்கு குறுகூலி நெல் நாடுரியும் ஆக நாள் ஒன்றுக்கு ஊர்க்காலால் நெல் தூணிப்பதக்காக நால் 360க்கு நெல் 180ன் கலம் ……..நிலம் ஒருமாவரையும் உடையாற் காடியருளக் காவேரித் திருமஞ்சனம் வைப்பார் நால்வற்கு நில மரைமா வரைக்காணியினால் பன்னிரடிக்கோலால் குழி 1512னால் இரட்டி குழி 3024க்கு குழி ஒன்றுக்கு ஆள் 3ம் குழி ஒன்றுக்கு ஆள் நாலாக ஆள் 1க்கு நெல் குறுணியாக ஆள் 12096 நெல் 1008 கலமும் இந்த ஸ்ரீநந்திகெஸ்வர நம்பி......
திருநந்தாவிளக்கு ஒன்றுக்கு நெய் உழக்காக விளக்கு இரண்டுக்கு நாள் ஒன்றுக்கு நெய் உரியாக நாள் 360க்கும் வேண்டு நெய் 170 நாழிக்கு விட்ட செவ்வரியாடு 180 ம் பொலிதகர் கிடாய் 2ம் இத்தேவர்க்கு முன்பு
திருவமுதுக்கு நாள் 1க்கு அரிசி குறுணி நாநாழிக்கு ஐஞ்சிரண்டு வண்ணம் நெல்லு முக்குறுணி அறுநாழியும் கறியமுதுக்கு நெல்லு முன்னாழியும் ……தயிரமுது நாழி உரிக்கு நெல்லு முன்னாழியும்….. திருநுந்தாவிளக்கு ஒன்றுக்கு எண்ணை உழக்குக்கு நெல்லு குறுணியும் ஆக நாள் ஒன்றுக்கு நெல்லு தூணிப்பதக்காக நாள் 360க்கு நெல்லு 180ன் கலத்துக்கு வெலி நூறு வரிசையாக வேண்டும் நிலம் ஒன்றெ முக்காலெ ஒரு மாவுக்கு நாங்கள் விற்று குடுத்த நிலமாவது etc.
…. விளக்கு அரைக்காலுக்கு ஆடு பதினொன்றெகாலும் …. ஆக விளக்கு ஒன்றுக்கு கைக்கொண்ட ஆடு தொண்ணூறும் தகர்க் கிடாய் ஒன்றுங் கைக் கொண்டு நாள் 110 நாலு முதல் நாள் ஒன்றுக்கு நெய் உழக்காக சந்திராதித்தவரை etc.
நாற்றூணி அரிசியால் வந்த நெல் முக்கலனெ தூணியும் நீக்கி நெல் நாற்க்கலனெ பதக்கால் திருமஞ்சனஞ் செயிவிக்க கடவோமாகவும் இக்காசு 50 கொண்டு நெல் முப்பதின் கலமும் அளக்க கடவோமாகவும்.
திருவாலந்துறை சண்டேசுரர்க்கு நான் விற்றுக்குடுத்த நிலமாவது இவ்வூர் ……..நடுவுட்பட்ட நிலம் அரைமாவும் மிகிதிக் குறைமை உள்படக் குடுத்துக் கொண்ட விலைப்பொருள் தீப்போக்குச் செம்பொன் கழஞ்சு