ஆளவந்தசெரி திருநாமத்துக்காணியான ராசராசவதிக்கு மெற்கு …. முதற்கண்ணாற்று மூன்றாஞ்சதிரத்து கீழ்கடைய நிலம் மூன்றுமாவின் கிழெட்டுமா இதில் 4ம் தர நிலம் 1 மாஇ கீழ் 4மா 5ம்தரநிலம் (குறியீடு) etc.
யிச்சாரிகைக்கோட்டையில் புகுதும் மிளகுபொதிக்குப் பொதி யொன்றுக்கு உழக்கு மிளகும் புடவைகட்டு ஒன்றுக்குப் பண மாகாணியும் இப்படியால் உள்ளது எடுத்துக் கறியமுதுக்கு வேண்டுவது… கொடுத்தொம் நான்கு திசை பதினெண் (விசையத்தார்)
பொன் ஆயிரத்து ஒருபத்து ஒருகழஞ்சும் வெள்ளித்தளிகை அஞ்சினால் வெள்ளீ இடை முன்னூற்று அறுபதின் பலமும் ……….நிலங்கள் உட்பட பதினாறடிக்கொலால் 128 குழி கொண்டது ஒருமாவாக வந்த ஊர்க்கோலால் ஊர்பட்டி நிலம் எட்டெமுக்கால்
பெரியநாச்சியாற்கு பூசைக்கும் திருப்பணிக்கும் உடலாக கார்மறுவிலெ நாலு மா நிலம் ஒருபூவிலெ ஆறு மாநிலம் ஆகப் பத்து மா நிலத்தால் ஒரு மா மடக்கு இருபத்தாறாவது பசானமுதல் இறைஇலியாக நிறுத்தி அந்தராயம் வரிசைப்படி காசு முதல் கொள்ளக்கடவுதாகச்சொன்னொம்
நிலவிலைப்ரமாணம் பண்ணிக்குடுத்த பரிசாவது …. இராஜராஜவதிக்கு மேற்கு வீரநாராயணவாய்க்காலுக்குத் தெற்கு இரண்டாங்கண்ணாற்று முதற் சதுரத்து கிழக்கடைய நிலம் ஒருமா வரைக்காணி நீக்கி இதன் மெற்கு வடக்கடைய 800 ….. விலைப்படி (குறியீடு) இப்பணம் 30க்கும் ஆக நிலம் (குறியீடு) இன்னிலம் 2மாவுக்கு விலைப்படி 60
அமுது செய்தருள சனி ஒன்றுக்கு எண்ணை உழக்கும் அரிசி நாநாழியும் ….. விட்ட நிலம் அரைமா முந்திரிகைய்க்கும் ஊர்காலால் தூணிப்பதக்கு நெல்லு இறுத்து இதி லிறைமிகுதி ...
இந்நிலத்தால் வந்த மடக்கு மடக்கு நிலம் மடக்கு முந்(ற்)றடத்திலாக திரள்விடக்கடவோமாக முந்பு நாங்கள் இதேவர் ஸ்ரீபண்டாரத்தே கொண்ட எழுமாறி பொன் அறுபத்திரு கழஞ்சு பொன்னால் …
பதினாரடிக்கோலால் குழி எண்ணூறு ஆக குழி 1608ம் ஆக குழி 2608ம் அகர இறையிலிப்படி கோயில் தானத்தார் பற்றி நாள் ஒன்றுக்கு குழையன் நாழியால் நாழி உரி நெய் அளந்து விரல்