பயிர் செய்து வருகிறபெர் பத்துக்கு இலக்கைக்கும் கொற்றுக்கும் பெர் ஒன்றுக்கு நன்செய் நிலம் இரண்டு மாவாக நிலம் இருபது மாவுக்கு இவ்வூர் படைப்பற்றிலெ நன்செய் நிலம் பதினறு மாவும் நிக்கி நின்ற நிலம் நாலுமாவுக்கு … நிலம் 47 மாவரையும் பதினெட்டாவதுமுதல்
இவ்வேரி அடைத்து தருகிறோம்மென இவனுக்கு இந்நாயனார் தேவதானத்தில் அகத்தூம்புகு தெற்கு கலவாது உள்பட பல தடி 13னால் குழி 2000மும் இவனுக்கு காணியாக விட்டொம்…. தான் வேண்டின பயிர் செய்து பண்டாரத்துக்கு நூறு குழிக்கு நாற்கலநெய் பதக்கு நெல்லு கொள்ளக்கடவதாகவும்
ஆதிசண்டேஸ்வர தேவகன்மிகள் பேரில் சதிரக்கோலால் ஐஞூற்று ஒருபத்திரண்டு குழி கொண்ட தொருமாவாக விலைகொண்டு இட்டநிலமாவது…… நிலம் ஒருமாவரையின் கீழரையும் ஐஞ்சாங்கண்ணாற்று ……..ஒருமா முந்திரிகைக் கீழ்காலும் ஆக நில மிருமாவரை முந்திரிகைக் கீழ் மூன்றே மாகாணி….etc.
நிலம் இருபது மாவிலெ ஒகூரிலெ நாலுமா நிலமடபுற இறையிலியாக நிக்கவும் நீக்கி நின்ற நிலம் பதினாறு மாவும் பிரமிசுசமுடைய நாயனார்க்கு,
அழகியபல்லவன் சந்தி என்று நாள் ஒன்றுக்குப் பதக்கு அரிசி அமுதுபடி செல்லவும்
வைத்த பொன் பதின்கழஞ்சரை …ஆட்டாண்டுதொறுஞ் சித்திரை விஷு திருவிழாவுக்கு நாராயநாழியால் எழுநாளைக்கும் நிசதி கலவரை அரிசி பத்தெட்டுக்குத்தல் மடாவில் அட்டும் பரிசெ எழுநாள் முந்துற ஸ்ரீகொயிலுக்கெ கொண்ட்டு சென்று அளப்போமானொம்