பொன் 30ன் கழஞ்சினாலும் பொலியூட்டு ஆண்டுவரை கழஞ்சின்வாய் மூன்று மஞ்சாடி பொன் ஆயன்படியால் நாற்கழன்சரையாலும் எறிலுஞ் சுருங்கிலுங் கழஞ்சுக்கு நாற்பதினாழிப்படி ஏண்ணை 110 நாழி
இரண்டு நந்தாவிளக்கெரிப்பதற்கு வைத்த பொன் ஊர்க்கற் செம்மை அறுபதின் கழஞ்சு இப்பொன் கொண்டு …. மூன்று மஞ்சாடிப்பொன் பலிசையாக இவ்வாட்டை கார்த்திகை முதலாறாறு திங்களில் நாற்கழஞ்சரைச்செய்து … இரண்டு சோறு குடுப்போமானோம்……. நிசதி எட்டரை காணம் தண்டமிட ஒட்டிக்குடுத்தொம்.
அறுபதின் கழஞ்சு பொன்னுள் தான் பிறந்த சோதி நாள் திருவமிர்து பத்தெட்டுக்குத்தற் பழவரிசி பதினறு நாழிக்கும் ஸ்நபனத்திற்கும் திருவமிற்துக்குமாக நெய் ஆறு நாழிக்கும் சர்க்கரை பலமுங் etc.
எட்டுமாவும் முற்றிபெற்ற இன்நிலமும் பொதைஞ்குடம் நீர் காவிரி நீர் அட்டுவோம்மானோம், கழஞ்சு பொன்னும் கொண்டு திங்கள் ஒரு குடம் தூணி கொள்ளும் குடத்தால் பொதைங்குட நீர் அட்டுவோமானோம்
ஒரு நொந்தாவிளக்கு நிசதி உரிய் நெய்யால் எரிவதற்க்கு குடுத்த பொன் 30 கழஞ்சு பொன்னுங் கொண்டு பெருமானடிகளுக்கு திருவிளக்கினுக்கு விற்றுக்குடுத்த நிலம்மாவது நான்கு மாக்காணியும்