ஆட்டை வட்டம் இட்டு வருகின்ற கழஞ்சு பொன்னும் இபூமி உழுவோமே இடுவிப்போமாகவும் இப்பன்னிரண்டு பட்டி நிலத்துக்கும் கோயில் வாசியிலாறு பொன்க்குடிமை எப்போர்பட்ட குடிமையும் …
நீக்கி நின்ற நிலம் இரண்டாயிரத்து ஒரு நூற்று நாற்பத்தேழும்மாவரை அரைக்காணி முந்திரிகைக் கீழ் முக்காலே ஒரு மாவரைக்கும் முன்பு தண்ட நிச்சயித்து இறுத்து வருகிற நெல்லு தொண்ணூறாயிரத்து ஒரு பதிநாயிரத்து ஐஞ்ஞூற்று முகலனெ தூணி எழுநாழியு தங்களுக்கு தானமாக வேலி ஒன்றுக்கு நெல் ..... கலமாக இருபத்தோராயிரத்து நானூற்று ஒருகலனெ இரு தூணிப்பதக்கு இருநாழி நெல்லுப் பதின்மூன்றாவது பசான முதல் தவிர்ந்து நீக்கி நெல்லு 70105 கலனெ தூணிப்பதக்கு ஐந்நாழியு.....
ஆகக் குழி ஆறாயிரமும் இன்னாயன்மார்க்கு அமுதுபடி உள்ளிட்டு வேண்டும் நித்தநிமந்தங்களுக்கும் திருப்பணிக்கும் உடலாக முழுக்க இறையிலியாகக் கண்டியதேவர் தந்தபடியாலே
ஸ்ரீ உத்தம சோழர் தங்களாச்சி செம்பியன் மஹாதேவியார் குடுத்த ஸ்ரீ முடி ஒன்பது மஞ்சாடியும் எழுமாவும் இதினுக்கு குடுத்த ஸ்ரீ சே ஒன்பது மஞ்சாடியும் எழுமாவும் இதினுக்கு கூட்டு வெள்ளி இருநூற்று கழஞ்சரையே நாலு மஞ்சாடியும் முடியில்
நன்சை நிலத்தில் முதல் தரத்தில் அடைத்த குழி முன்னூறும் இரண்டாம் தரத்தில் தெற்க்கு அடைய அடைத்த குழி இருனூறும் திருநந்தாவானத்துக்கு அடைத்த குழி இருனூறும் ஆக குழி 700