இன்னிலம் ஒருமாவும் மாதம் ஒன்றுக்கு நாலுகோட்டை நெல்லும் நாலு பணத்துக்கும் இரண்டு கோட்டை நெல்லும் இரண்டு பணமும் நாளொன்றுக்கு நானாழி சோற்றுக்கு இருநாழி சோறும் ….
நாள்தொறும் அர்சனை அறையில் குடுக்கும்படி நாளது முதலுக்கு கற்பித்த நாள் ஒன்றுக்கு அரிசி பதினாழியும் கறிபலம் எட்டும் உப்பு உழக்கும் மிளகு ஆழாக்கும் சர்கரை பலம் ஒன்றும்…
நித்தற்படி நறுநெய் நித்தமுழக்கு நெய்யால் திருநுந்தாவிளக்கு ஒன்றெஇக்கக்கடவோமாக நாங்கள் கொண்ட காசு 25, திருக்குத்துவிளக்கு ஒன்றினால் இடை இருப்பு நராசதோடும் உள் கரு மண்ணோடும் இடை 100 உசரம் முச்சானெ
இந்நடுவுபட்ட நிலம் முக்காலெ இரண்டு மாவும் etc., அமுது போது ஒரு பிடியாக நாலுசந்திக்கும் நெய் உழக்கும், பால் நானாழியும், கடுகு நானாழியும் அரிசி பதக்கும்…..
தடி இரண்டினால் நிலம் நாலுமாக்காணி அரைக்காணி முந்திரிகையும், தடி நாலினால் நிலம் பதிஒருமாகாணி முந்திரிகையும் , நிலம் எட்டுமாக்காணியும் ஆக நிலம் இருபத்துநாலுமாவும் இன்னால் முதல்…
இன்னாயனார்க்கு திருநாமத்துகாணியாக (குறியீடு), பூசைக்கு இன்னாள் முதல் நாள் ஒன்றுக்கு பூரிகுத்தல் அரிசி குறுணியும் பூரி உப்பு உரியும் திருவிளகெண்ணை உழக்கும் பண்டாரங்கள் தோறும் செலவு விராசகேசரியாலெ விடவும்
உதேசம் குழி எண்ணாயிரத்தால் நிலம் நால்வேலியும் இதில் உள்பட்ட, பயிர் செய்ய அடைத்த நிலம் பத்தொன்பதிற்று வேலியுட்பட நிறுத்தின நிலம் இருபத்தேழு வேலியும் ஆக நிலம் 64முக்காலெ நீக்கி நிலம் 147 முக்காலில் இன்னாயனார்க்கு பூசைக்கும் திருப்பணிக்கும்