உதேசம் குழி எண்ணாயிரத்தால் நிலம் நால்வேலியும் இதில் உள்பட்ட, பயிர் செய்ய அடைத்த நிலம் பத்தொன்பதிற்று வேலியுட்பட நிறுத்தின நிலம் இருபத்தேழு வேலியும் ஆக நிலம் 64முக்காலெ நீக்கி நிலம் 147 முக்காலில் இன்னாயனார்க்கு பூசைக்கும் திருப்பணிக்கும்
128 குழி கொண்டதொரு மாவாக வந்த நிலம் (குறியீடு)மூன்றுமா முந்திரிகை கீழ் முக்காலிலே திருநந்தவனம் செய்யவும், நாள் ஒன்றுக்கு குறுணி நாநாழியாக வந்த நெல்லுக்கு கொண்டு விட்ட இவ்வூர்க் கீழ்பிடாகை கிடாரங்கொண்ட…
நிலம் பத்தெ முக்காலினால் நிலம் நாற்பத்து மூன்று மாவும் தேவதானமாக இட்டு, திருமாளிகையில் கல்வெட்டிந திருப்பள்ளிதாமம் ஐஞ்சு நூறாஇரத்து ஒரு பதினாயிரமும் உள்பட்ட திருமுகப்படி இறையிலியாக விட்ட etc.
கிறாமம் 3க்கு இரெகை.. இதில் விளைந்த முதல் கொண்டு நாள் ஒன்றுக்கு அமுது, கற்பூரம் கால் கழஞ்சும், கஸ்தூரி அரைக்கால் கழஞ்சும், பால் நானாழி தயிர் நானாழியும் சற்கரை பலம் இரண்டும் தேன் உரியும் )etc.
இக்காசு பதினைய்யாயிரமும் இன்னாச்சி உடையார் திருக்கமிசுரமுடைய நாயனார் சிபண்டாரத்திலெ இற்றை நாள் ஒடுக்கினமையில், நாயனாற்கு இட்ட பரிகலமுங் காலும் எடை நூற்றம்பதின் பலம்