முப்பதின் கழஞ்சு பொன் கொண்டு குடுத்த நிலமாவது நிலம் முக்காலும், காலும், அரையே காணியும் ஆக நிலம் ஒன்றரையே காணியும் இத்தேவர் திருகாமகோட்டத்து ….. குட்பட்ட நிலம் மூன்றுமாகாணியும் ஆக நிலம் முக்காலே மூன்று மாகாணியும் இத்திருகாமகோட்டமுடையார் கன்மிகள் பக்கல் பொன் கொண்டு
கோயிலி தேவரையாள் எடுத்தாரு நிலம் அரைகாலாக இவர் பன்னிருவர் பெண்டுகளுக்கு விட்ட நிலம் ஒன்றரையும் பாடுவற்கு விட்ட நிலம் காலும், பாதம் தாங்குவார்க்கு விட்ட நிலம் மூன்று மாக்காணியும், அமுதுபடிக்கு விட்ட நிலம் இரண்டு மாக்காணியும் ஆக நிலம் 2 3/4 அரைமாவும் இறையிலி செய்வித்து.
அமுது செய்தருள வேண்டுவனவையிற்றுக்கு அமாவாஸி ஒன்றுக்கு நெல் கலனே பதக்கும் ஆபூர்விகளாய் வந்த தேவர் அடியார்க்கு சட்டிச்சோறு,சட்டி ஒன்றுக்கு அரிசி இருநாழியாக சட்டி நாலுக்கு அரி குறுணிக்கு, நெல் பதக்கு நாந் நாழியும் அக நெல்லு கலனெ தூ….
அருமொழிதேவப் பிலாற்றுக்கு மேற்கு திவாகர வதிக்குத் தெற்கு 17ம் கண்ணாற்று 11ம் பாடகந் தெற்கடைய நிலமரை மாவும் 12ம் பாடகம் நிலம் ஒருமாவும் ……ஆகப் பாடகம் நிலம் எண்மாவரையும் நாலாவது முதல் அந்தராயமும்…..
இன்னிலம் இருபது மாவும் குடிநீங்காத் திருவிடையாட்டமாக தாம் வேண்டும் பயிர் செய்து கொண்டு நாயினார் ஸ்ரீபண்டாரத்துக்கு ஆண்டொன்றுக்கு பணம் இரண்டும் நெல்லு இருபதின் கலமுமாக 40 பணம், 400 கலமும் ஆண்டுதோறும்
காணியினால் விதை தூணிப்பதக்கும், இரண்டாங் கூற்றில் காணியினால் விதை தூணிப்பதக்கும், அரிசி நானாழிக்கு நிலம் இருபூவிளையு நிலம் நல்லூரில் விட்ட நெல் விதை இருகலமும்