பெருமாளுக்கு திருவமுதருசி நாநாழியும், இருநாழியும், இருநாழியும் ஆக அரிசி குறுணிக்கு இரண்டஞ்சாக்கி நாள் ஒன்றுக்கு நெல்லுப் பதக்கு நா நாழியும், இருநாழியும், நெய்யமுது ஆழாக்குக்கு நெல் நாநாழியும், தயிரமுது நாழிக்கு நெல் நாழியும், நாழியும் ஆக நாள் ஒன்றுக்கு நெல் முக்குறுணி நாநாழிக்கும் திருவமுதுபடியாக நாங்கள் இறையிலி விட்ட
பொன் பதின் கழஞ்சு கொண்டு பலிசை அட்ட இதற்க்கு சந்திராதித்தவற் நிசதி அஞ்ஞாழிப்படிக்கு அட்டி ஆண்டு தோறும் அளக்கக்கடவ நெல்லு ஐம்பத்தாறு காடி குட்டை நெல்லும் …. தூயவாக்கி எண்ணாழிக் காலால் அட்டுவோமானோம்.
காசு கல்லால் துளைநிறை பொன் 15 கழஞ்சு கொண்டு ......திருவமுதுக்கு விற்று கொடுத்த நிலமாவது …. தடி இரண்டினால் நிலம் எழுமாக்காணிக் கீழ் முக்காலே ஒருமாவும் ……… ஆக பதிநறுசாண்கோலால் ஆயிரங்குழி கொண்டது பட்டியாக இந்நிலம் இறைஇழிச்சி இதநால் வந்திது …..இந்நெல்லு ஐம்பதின் கலமும் முட்டாமெ அட்டுவதானொம்
காசு கல்லால் பொன் பதிநறு கழஞ்செய் அரைக்காலும் கொண்ட பரிசாவது ….. கோமளத்து நாராசகாலோடொக்கும் மரக்கால் ஆண்டு வரை தையிடைவ்வரத்தில் அளக்கக்கடவ நெல்லு இருபத்தைங்கலமும் etc.
பொலிகளங்கள்தொறு மளக்குமவையிற்றுக்கு நூற்றுக்கு ஒரு குளகமும் நிறுக்கு மவையிற்றுக்கு கொள்வானொரு பலமும் கொடுப்பானொரு பலமும், பருத்திநூல் பொதி யொன்றுக்கு பணம் காலும், வெல்லப் பொதியொன்றுக்கு பண மாகாணியும் உப்புப் பொதியொன்றுக்குப் பணம் ஒரு மாவும் செவொன்றுக்குப் பண மரைக்காணியும்
இரண்டாம் கண்ணாற்று நாலாஞ் சதிரத்து நிலம் இரு வேலியில் கீழை வேலியில் தெற்கடைய ஒரு கூறு நீக்கி இதன் வடக்கு நில நான்மாவரைக்காணிக் கிழரையில் வடக்கடைய நிலம் இரண்டு மாவும், 4ம் கண்ணாற்று 2ம் சதிரத்து கீழ்கண்மயில்லிறகிட்டு ஒரு கூறு நீக்கி இதன் கிழக்கு விளைநிலம் 2மாவின் கீழ் 9மாவும் ஆக நிலம் 4 மாவின் கீழ் 9 மா.
ஆவிமானவாதாவி நல்லூர் தரப்படி நிலம் அறுபத்தாறரையெ நாலுமாவில் உடையார் ……பழந்தேவதானமும் பிடாரி இறையிலியும் ஆக நிலம் நாலரையெ நாலுமாவும் நீக்கி நின்ற நிலம் 62 etc.
இந்நிலம் இரண்டு மா முக்காணியும் கீழரையும் இதில் தவிறக் கொண்டு இறைஇழிச்சி இப்படி நிமந்த பண்ணிகைப்பாடிக்கும் திருவமுதுபடிக்கு நில மாகாணிக் கீழ் காணியரைக்காலும் நீக்கி மேற்கடைய …. திருநந்தவபுறமாக நிலம் ஒரு மாவரைக்கணி அரைக்காலும்
நெல்லு 900த்திலும் நாங்கள் செய்த நிவந்தமாவது பொரிகறியமுதுக்குமாக நிசதம் நெய் உழக்குக்கு நெல்லு (குறியீடு) யும் தயிரமுது மூன்று சந்திக்கும்மாக நிசதம் உரைக்கு நெல்லு க உரியும்
கணக்கு கண்டு கடவோமான பொன் 70ன் கழைஞ்சுக்கும், வாரா நின்ற நிலம் மருதன் ஒமுதன் திருவமிர்தினுக்கும் ஒரு திருவிளக்கினுக்குமாக வைத்த நிலம் 2மாவும் கொவரைங் காணியும் (குறியீடு), அரைகாலும், 2மாகாணியும், முக்காணியுமாக நிலம் அரைக்காலும்