திருஉலகளந்தேறின நிலம் உட்பட நிலம் நாற்பத்தாறே காணி அரைகாணியினால் நெல்லு நாலாயிரத்து ஐநூற்றுத் தொண்ணூற்றுக் கலத்தினால் பத்தாறாக்கி நெல் இரண்டாயிரத்து எழுநூற்றைப்பதறு கலனே ஐங்குறுணியினா லளக்கும் நெல் 2756 கலனே ஐங்குறுணி நெல்…..இறையிலி நிலம் நாற்பத்து நாலே ஆறுமா முக்காணி அரைக்காணி முந்திரிகையினால் காணிக்கடன் நெல்லு 4428 கலனே ஐங்குறுணினால் பத்தாறாக்கி நெல் 2656னால் நெல் ஐங்குறுணினால் நிச்சயித்த நெல் 2656 கலனே
திரு உலகளந்தான் நிலம் உட்பட நிலம் பதினாறரையே நாலு மா இதில் மடைவிளாகத்தாலுந் …….. நீங்கு நில இரண்டே முக்காலே மூன்று மா முந்திரிகை நீக்கி நிலம் பதின் மூன்றேய் முக்காலே முக்காணி அரைக்காணி முந்திரிகையும் இவனுக்கு காணியாக நிச்சயித்த 866 கலம்
தேவதானம் எயினிகுடி திருஉலகளந்தேறின நிலம் உட்பட நிலம் இருபத்தைஞ்சே மும்மாவரை காணிக்கடன் நெல் 2498 கலத்தினால் பத்தாறாக்கி நெல் 1498 கலனே இரு தூணிப் பதக்கினால் நிச்சயித்த நெல் 1500 கலனே இரு தூணிக்குறுணி.
தேவதான இறையிலி இட நாம் நீர்வார்த்த நிலம் பதிற்று வேலிக்கு தேவர்க்கு இறுக்க வேலி ஒன்றுக்கு நூற்றிருபதின் கலமாக வந்த நெல்லுக்கும் அந்தராயம் பாட்டத்துக்கு ……இறுக்கிற நிலம் நீக்கி நின்ற நிலத்திலே பதின்மூன்றரையே மாகாணீ நிலமும் குலோத்துங்கன் பாசாலியில் காசு பாதி முதல் கொண்ட நிலத்து இடுகிற நிலம் முக்கலே ஒரு மாவரைக் காணிக்குச் ..... காணிக்கடன் வேலி ஒன்றுக்கு நெல்லு நூற்றுக்கலத்தினால் பத்தாறாக்கி அறுபதின் கலமாக இறைகட்டியும் ....
ஆகப் பேர் இருபத்து நாலுக்கு பாகம் இருபத்து நாலுக்கு தன்மதானமாக குடுத்த மனை 24க்கு இருபத்து ஓரடிக்கோலால் பாகம் ஒன்றுக்கு நிலம் இரண்டுமா ஆக நிலம் 48 மாவுக்கும் இருபத்து நாலடிக் கோலால் புன்செய் நிலம் 24 மாவுக்கும் விட்ட விளாகத்துக்கும், நத்தக்கூற்றுக்கும் மனைக்கும்.etc.
நிலன் அறுபதிநறு வேலியும் விரராஜெந்திரவிளாகமென்னு நாமத்தால் புது திருத்தாக்கி, பொன் இராஜகேசரியால் நெல்க் குறுணியாக வந்த நெல்லு அறுநூற்றருபதின் கலனெ … சமைப்பர் நால்வர்க்குப் பேரால் நெல்லு இருநாழியாக நாள் ஒன்றுக்கு நெல்லுக் குறுணியாக நெல்லு முப்பதின் கலமும் ஆக நெல்லு 1200 கலம் etc.
குடிப்பற்றுக்கும் பயிற் நின்ற நிலத்துக்கும் மாத்தால் கோட்டை அரையாகவும், தரவாயம் உப்பாயம் பாதையாயம் வகைக்கு பணம் ஒன்றுக்குப் பணம் மாகாணியாகவும், குழி ஒன்றுக்கு பணம் அரைக்காலாகவும், இவ்வாலயம் உள்ள அளவுங் கைக்கொண்டு பூசையுந் தாழ்வர நடத்தி போதவும்
சபையொம் கொண்ட காசு முப்பதுக்கு காசு ஒன்றுக்கு அருமொழிதேவனால் இருகல தூணிப்பதக்காக வந்த எழுபத்தைங் கலமும் ஆட்டாண்டு தொறும் பொலியூட்டாக ஆசந்திரகாலமும் தேவர் பண்டாரதெய் கொடுவந்து.
பண்டாகக் கல்லால் கொண்ட துளைநிறை பொன் இருபதின் கழஞ்சுக்கு பொன் கழஞ்சு ராஜகேசரிமரக்காலால் பலிசை இருகலமாக ஆண்டு வரை அளக்க கடவ நாற்பதின் கலத்துக்கும் ஆடியருள நெய் எண்பதினாழிக்கு முப்பதிரு கலமும் etc.
ஒரு சட்டிச் சோறு புறப்படுவதற்கு பத்தெட்டு குத்தலரிசி நாழி உப்பு இரு செவிடும் சற்கரை ஒரு செவிடும் பருப்பு ஆழாக்கும் …...பண்டாரத்து ராஜகேசரியால் ஆசந்திரகாலம் ஆண்டு வரை அளப்பதான நெல்லு முப்பதின் கலம்.