ஸ்ரீ பண்டாரத்து ஒடுக்கின காசு 100ம் கொண்டு பொலிசை செலவாக நாள் ஒன்றுக்கு எண்ணை உழக்காக வந்த எண்ணெய் ….இத்திருவிளக்கு வைத்து எரிக்க இட்ட முச்சாணுயரத்து உட்கரு இரும்பும் உட்பட எடை என்பத்தைம்பலத்தினால் தராக்குத்தி விளக்கு ஒன்றும்
இந்நிலமூன்றுமாவும் …. இறுத்து யிறை மிகுதி கொண்டு இந்நாயனார்க்கு திருஅமுதுபடிக்கு நாள் ஒன்றுக்கு இருநாழியாக வந்த அரிசியும் ஒரு திருசந்தி விளக்கும் உபையமாக
நாலாங்கண்ணாற்று ஐஞ்சாம் துண்டத்து தென் மேற்கடைய நிலம் ஒருமா முந்திரிகையும், அரைக்காணி கீழ் மும்மாவரை, நிலம் முந்திரிகை கிழ் அரையும் ஆக நிலம் அரைமா அரைக்காணி முந்திரிகை கிழரையெ மும்மாவரை
ஒரு மா முந்திரிகை நிலம் திருநாமத்துகாணியாக விலை கொண்டோம் ..இநிலம் ஒருமாமுந்திரிகையினால் தரப்படி மடக்கு நிலம் அரைக்காணிக் கீழ் ஒருமாவரை முந்திரிகையும் கழித்து இதுக்கு தலைமாறு இறையிலியில் கழித்து இறுப்பாக கூட்டிக் கொள்ளும் etc.
நிலம் ஐஞ்செயிருமாவரையும் பதினெட்டாவது முதல் இத்தேவர்க்கு தேவதான இறையிலியாக இட்டு இன்னிலத்துக்கு இறைகட்டினபடி தவுந்து காணிக்கடன் வேலி ஒன்றுக்கு நெல்லு நூற்றுக்கலத்தினால் பத்தாறு ஆக்கி அறுபதின் கலநெல்லாக இறைகட்டியும் etc.
நிலம் அரைமா 2ம் தரமும் 2ஞ்செய் முதல் 13ஞ்செய்வரை நிலம் 6மா முதற் தரமும் 14ஞ்செய் நிலம் அரை மா 2ம் தரமும் கடுங்கொல்லி கால் வட கண்ணாறு முதற் செய் நிலம் அரைமா 2ந்தரமும் 2ஞ்செய் முதல் 13ஞ்ச்ய்வரை நிலம் 6மா முதற் தரமும் 14ஞ் செய் நிலம் அரைமா 2ம் தரமும் ஆக நிலம் இருபத்தெட்டு மாவும்